/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலங்கை தமிழர் முகாம்களில் திருமணப்பதிவு கட்டாயம்
/
இலங்கை தமிழர் முகாம்களில் திருமணப்பதிவு கட்டாயம்
ADDED : ஆக 08, 2025 08:48 PM
கோவை; கோவையிலுள்ள இலங்கை தமிழர்கள்மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சிறப்பு முகாம் நடத்த பதிவுத்துறை ஏற்பாடுகளைசெய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில், ஆலந்துறை அருகே உள்ள பூலுவப்பட்டி, மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே உள்ள வேடர்காலனி, பொள்ளாச்சியிலுள்ள கோட்டூர் மற்றும் ஆழியார் பகுதிகளில் 1,000 த்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர் குடும்பங்கள் அகதிகள் முகாமில் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் மூன்று பேர் இருந்தால் அவர்களுக்கு மாதம். 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும் ஓவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் மாதம், 12 கிலோ அரிசியும், 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, 6 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.தற்போது இவர்களது திருமணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் மற்றும் ஆதார் கார்டுகளின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி ஏற்கனவே திருமணம் நடந்திருந்தாலும், நடக்கபோவதாக இருந்தாலும் அதற்கும் திருமணப்பதிவு செய்யப்படுகிறது.
இது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வருவாய் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

