/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
/
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
ADDED : ஜூலை 23, 2025 09:50 PM
கோவை; தமிழக அரசு பள்ளி களில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும், மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படவுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், அரசு நடுநிலை பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு, தற்காப்பு கலை பயிற்சி வழங்க, மாதந்தோறும் ஒரு பள்ளிக்கு 4 ஆயிரம் வீதம், பயிற்சியாளர்களுக்கான ஊதியத்துடன் ரூ.725.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி களுக்கு 823.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகள் பயிற்சிகளாக வழங்கப்படவுள்ளன.
வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் 24 பயிற்சி வகுப்புகள் மாணவிகளுக்கு நடத்தப்படும். பள்ளி வளாகத்திலேயே நடைபெறும் இந்த பயிற்சியில், நடுநிலைப்பள்ளிகளில், அதிகபட்சமாக 100 மாணவிகளும், குறைந்தபட்சம் 10 மாணவிகளும் பங்கேற்கலாம்.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 100 மாணவிகளுக்கு மிகாமல் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்காப்பு கலை பயிற்சி அளிப்பதில், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.