/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
/
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
ADDED : செப் 29, 2025 10:27 PM

வால்பாறை:
அரசு பள்ளியில் நடைபெற்ற தற்காப்பு கலை பயிற்சியில், மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியருக்கான தற்காப்பு கலை பயிற்சி நடந்தது. பயிற்சியை தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் துவக்கி வைத்தார்.
பள்ளி வளாகத்தில் நடந்த பயிற்சியில், கராத்தே, சிலம்பாட்டம் ஆகிய தற்காப்பு கலை குறித்து, கராத்தே ஆசிரியர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு பள்ளியிலேயே தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவியர் படிப்பில் மட்டுமல்லாது பிற துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், மாணவியர் தற்காப்பு கலை பயிலும் வகையில் பள்ளி வளாகத்தில் கராத்தே, சிலம்பாட்டம் கற்றுத்தரப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.