தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருதமலை தைப்பூசம்போக்குவரத்து மாற்றம்

 மருதமலை தைப்பூசம்போக்குவரத்து மாற்றம்

 மருதமலை தைப்பூசம்போக்குவரத்து மாற்றம்


ADDED : ஜன 30, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, இன்று முதல் 2 ம் தேதி வரை, மலை மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

அடிவாரத்தில் நிறுத்தி விட்டு, பஸ்களில் செல்லலாம். அல்லது படிக்கட்டு வழியாக நடந்து சென்று தரிசனம் செய்யலாம்.

பாரதியார் பல்கலை குடியிருப்பு வளாகம், தொலைமுறை கல்வி கூடம் வளாகம், அரசு சட்டக்கல்லுாரி மைதானம், பொதிகை பில்லர் பார்க்கிங், பொதிகை ஆர்ச் பார்க்கிங், சிடிசி பஸ் ஸ்டாண்ட் பின்புறம், தைலக்காடு பார்க்கிங் உள்ளிட்ட 11 இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை நகரிலிருந்து வரும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வடவள்ளி, தொண்டாமுத்துார் ரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மகாராணி அவென்யூ, சின்மயா வித்யாலயா, அஞ்சனுார் சந்திப்பில் வலது புறம் திரும்பி மருதமலை வர வேண்டும். அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகள், நேரடியாக பாரதியார் பல்கலை நுழைவு வாயில் எண்:2 வரை சென்று பயணிகளை இறக்கி விடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us