ADDED : மார் 04, 2026 06:28 AM

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக, 89 லட்சத்து, 78 ஆயிரத்து, 577 ரூபாய் இருந்தது.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில், தட்டு காணிக்கை உண்டியல்கள், 22 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், சலவநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
நிரந்தர உண்டியலில், 58 லட்சத்து, 39 ஆயிரத்து, 353 ரூபாய்; தட்டு காணிக்கை உண்டியலில், 31 லட்சத்து, 39 ஆயிரத்து, 224 ரூபாய் இருந்தது. மொத்தம், 89 லட்சத்து, 78 ஆயிரத்து, 577 ரூபாய் காணிக்கை இருந்தது.மேலும், தங்கம், 170 கிராம், வெள்ளி, 306 கிராம் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, மாசாணியம்மன் கோவில் தக்கார் ராஜ்குமார், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சத்தியவதி,மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் முத்துராமலிங்கம், ஆனைமலை ஆய்வர் சித்ரா முன்னிலையில் நடைபெற்றது. கண்காணிப்பாளர், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
