ADDED : ஏப் 22, 2026 07:54 PM
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக, 51 லட்சத்து, 39 ஆயிரத்து, 222 ரூபாய் இருந்தது.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
மொத்தம், 31 உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், சலவநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். உண்டியல்களில் மொத்தம், 51 லட்சத்து, 39 ஆயிரத்து, 222 ரூபாய் காணிக்கை இருந்தது.
மேலும், தங்கம் - 71 கிராம், வெள்ளி - 123 கிராமும் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது, கோவில் தக்கார் ராஜ்குமார், கோவை மண்டல சரிபார்ப்பு துணை ஆணையர் சரவணன், கோவில் துணை ஆணையர் சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதி பொள்ளாச்சி சரக ஆய்வர் கோகிலவாணி முன்னிலையில் நடைபெற்றது. கண்காணிப்பாளர், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
