/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருந்திரள் புத்தக வாசிப்பு; 850 மாணவர்கள் பங்கேற்பு
/
பெருந்திரள் புத்தக வாசிப்பு; 850 மாணவர்கள் பங்கேற்பு
பெருந்திரள் புத்தக வாசிப்பு; 850 மாணவர்கள் பங்கேற்பு
பெருந்திரள் புத்தக வாசிப்பு; 850 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 27, 2025 10:55 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, மாணவ மாணவியரின், பெருந்திரள் புத்தக வாசிப்பு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலர் கவிஞர் கவிதாசன் தலைமை தாக்கினார். 'கோவை சகோதரன்' அமைப்பின் தலைவர் இயகாகோ சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ''புத்தகத்தை படிக்கும்போது உத்வேகம் மற்றும் அனுபவம் கிடைக்கிறது. அறம் சார்ந்த வாழ்க்கையை புத்தகங்கள் கொடுக்கின்றன. புத்தகங்களை படிக்கும்போது நேரம் போவது தெரியாது, அதே சமயம் பல புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்கலாம்.
இளம் வயதில் பாட புத்தகத்தை மட்டுமே படித்துக் கொண்டு இருக்கக் கூடாது, மற்ற நேரங்களில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கதை புத்தகங்களையாவது படிக்க வேண்டும்,'' என்றார்.
இதில் 850 மாணவ, மாணவியர், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், புத்தகக் கண்காட்சி பொறுப்பாசிரியர் பூர்ணிமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.