தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தி.மு.க., நடத்திய பெருங்கொள்ளை

தி.மு.க., நடத்திய பெருங்கொள்ளை

தி.மு.க., நடத்திய பெருங்கொள்ளை


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

–நமது நிருபர்–: கோவை பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதற்கு, அமைச்சர்கள் அருண்ராஜ், ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ரமேஷ் அறிக்கை: பெரியார் அறிவுலகத்திலும் ஊழல் செய்யத் தயங்காத திமுகவின் உண்மை முகம். கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பியுள்ள கேள்விகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் 1,500 க்கும் மேற்பட்ட நூல்கள் பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றிருப்பதும், அந்தப் பதிப்பகத்தின் இருப்பே பலருக்குத் தெரியாத நிலையில் இவ்வளவு பெரிய அளவில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இது வெறும் நூல் கொள்முதல் தொடர்பான சர்ச்சை அல்ல; அறிவின் பெயரால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பட்டதா என்ற மிகத் தீவிரமான கேள்வி.

திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. ஊழலற்ற ஆட்சி, சமூக நீதி, பகுத்தறிவு என்று மேடைகளில் முழங்கிவிட்டு, ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முடியாது.

அறிவாலயம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு தமிழகத்தின் வளங்களைச் சுரண்டிய திமுக, இப்போது பெரியார் அறிவுலகத்தின் நூல்களிலும் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அரசியல் ஆதாயத்திற்கான வியாபாரப் பொருளும் அல்ல. இதனை புரிந்துகொண்டு முன்னாள் கொளத்தூர் எம்எல்ஏ ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

அமைச்சர் அருண்ராஜ் அறிக்கை: நூலகத் துறையிலும் பார்டி பண்ட்; பெரியார் அறிவுலகம் பெயரில் திமுக நடத்திய பெருங் கொள்ளை. மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் செய்த மாபெரும் அறிவுத் துரோகம். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கோவையில் சில நாட்களுக்கு முன் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்தி, போலிப் பெருமைகளைச் சுயபுராணமாகப் பாடிச் சென்றார். அரண்மனை நாடகங்கள் எத்தனை காலம் நிலைக்கும்?

அகல் விளக்குப் பதிப்பகம், உதயசூரியன் பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் என்ற முகமூடிகளை மாட்டிக்கொண்டு, மனித மூளை சிந்திக்காத... முழுக்க முழுக்கச் செயற்கை நுண்ணறிவால் அச்சுக்கூடத்தில் அவசரமாக உற்பத்தி செய்யப்பட்ட விஷக் குப்பைகளை நூல்களாக மாற்றி, இந்த நூலகத்தின் அலமாரிகளில் திமுக அரசு திணித்திருக்கிறது என்கிற உண்மை தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

பாரதியாரின் நெஞ்சுரமிக்க வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போட்டும், காலத்தால் அழியாத அறநெறி நூலான நாலடியாருக்கே பொய்யான புனைவுகளைக் கட்டவிழ்த்து விட்டும், எதிர்காலத் தலைமுறையினரின் சிந்தனையில் அறியாமையின் நஞ்சை விதைக்கத் துணிந்திருக்கிறது இந்தத் திருட்டுக் கூட்டம். கல்வி, சிந்தனை, பகுத்தறிவு என்று மேடைதோறும் முழங்கிய தீய சக்தி திமுகவின் ஆட்சியில், இந்த ஒட்டுமொத்தப் பாவச் செயலுக்கும் விதை போட்டது யார்?

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், '400 கோடி வசூல் புகழ் மகேஷ்' தலைமையில் அமைக்கப்பட்ட மாநில நூலகக் குழுவின் மூலமாக நூலகத் துறையிலும் பார்டி பண்ட் ஆ எனத் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.

அடுத்த தலைமுறைப் பிள்ளைகளின் அறிவுக் கண்களைக் குருடாக்கத் துணிந்த இந்தத் துரோகத்தை மக்கள் அரசு ஒருபோதும் மன்னிக்காது. முதல்வர் விஜயின் அரசு சட்டத்தின் கரங்களால் மிகக் கடுமையாகத் தண்டிக்கும்.

இவ்வாறு அருண்ராஜ் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us