தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓட்டு எண்ணிக்கைக்கு பொருட்கள் அனுப்பியாச்சு

ஓட்டு எண்ணிக்கைக்கு பொருட்கள் அனுப்பியாச்சு

ஓட்டு எண்ணிக்கைக்கு பொருட்கள் அனுப்பியாச்சு


UPDATED : மே 02, 2026 05:22 PM

ADDED : மே 02, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2026 05:22 PM ADDED : மே 02, 2026 04:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான பொருட்கள் மே 2 ஆம் தேதிஅனுப்பி வைக்கப்பட்டன.

கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஜி.சி.டி.யில், மே 4 ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அதற்கான முன்னேற்பாடுகள் மே 2 ஆம் தேதி நடந்தன.

ஓட்டு எண்ணும் அறைக்குள் பணிபுரியும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர், வேட்பாளர்களின் ஏஜன்ட்டுகள் பயன்படுத்துவதற்கான பேட்ஜ், பதிவேடுகள், ரப்பர் ஸ்டாம்ப்கள் மற்றும் கருப்பு நிற உறைகள் நேற்று அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.

தபால் ஓட்டு எண்ணுவதற்கான பெட்டி எப்படி இருக்க வேண்டும், அதில், சின்னங்கள் எந்த வரிசையில் ஒட்ட வேண்டும் என்பதை விளக்கும் வகையில் மாதிரி பெட்டியும் அனுப்பப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us