UPDATED : நவ 27, 2026 07:30 PM
ADDED : நவ 27, 2026 07:30 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவையில் உள்ள ஒரு மாநகராட்சி பள்ளி கணித ஆசிரியர் செந்தில்குமார்,45.
இவர் அந்த பள்ளியின் மாணவிகள் இருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பெற்றோரிடம் மாணவிகள் கூறி அழுதுள்ளனர். பெற்றோர் பள்ளியில் சென்று கேட்டனர். போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். மாணவிகள் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் செந்தில்குமாரை, போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிக்கல்வித்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள்.
