தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களுக்கு கணித திறனறி தேர்வு

மாணவர்களுக்கு கணித திறனறி தேர்வு

மாணவர்களுக்கு கணித திறனறி தேர்வு


ADDED : ஜன 20, 2025 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2025 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடந்த கணித திறனறி தேர்வை, 3,333 பள்ளி மாணவர்கள் எழுதியுள்ளனர்.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், ஆண்டுதோறும் கணித திறனறி தேர்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது.

இந்தாண்டு கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு, கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடந்தது.

இதற்கு, 5 முதல், 8ம் வகுப்பு வரை பயிலும், 3,867 மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்தனர். 80 ஒரு மதிப்பெண் வினாக்கள் அடங்கிய தேர்வை, 3,333 பேர் எழுதினர்.

மதிப்பெண் அடிப்படையில், 5ம் வகுப்பில் முதல், 26 பேர் உட்பட, 6, 7, 8 என ஒவ்வொரு பிரிவிலும் சேர்த்து, 104 பேருக்கு ரொக்க பரிசு வழங்கப்படவுள்ளது.

அதாவது, ரூ.2,000, ரூ.1,500, ரூ.500, ரூ.250 என மொத்தம் ரூ.70 ஆயிரம் ரூபாய் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தேர்வு முடிவுகள், பிப்., இரண்டாவது வாரம் வெளியிடப்படும் என, மண்டல அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us