/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணிதத்துறை கருத்தரங்கம் மாணவர்களுடன் கலந்துரையாடல்
/
கணிதத்துறை கருத்தரங்கம் மாணவர்களுடன் கலந்துரையாடல்
கணிதத்துறை கருத்தரங்கம் மாணவர்களுடன் கலந்துரையாடல்
கணிதத்துறை கருத்தரங்கம் மாணவர்களுடன் கலந்துரையாடல்
ADDED : ஜன 18, 2024 10:18 PM

உடுமலை, -உடுமலை, ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் கணிதத்துறை கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கை கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா துவக்கி வைத்தார். செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார்.
'எமர்ஜிங் டிரெண்ட்ஸ் இன் கம்ப்யூடேஷனல் மேதமெட்டிக்ஸ்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
மலேசியா கர்டின் பல்கலை.,யின் கணிதத்துறை பேராசிரியர் சிவராமன், கேரளாவின் என்.ஐ.டி., நிறுவன பேராசிரியர் சுனில்மேத்யூ, ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கணிதத்துறை பேராசிரியர் கீதா உள்ளிட்டோர் கருத்தரங்கில் மாணவர்களுடன் கலந்துரையாடினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கணிதத்துறை பேராசிரியர்கள் பத்மாவதி, பங்கஜம் செய்திருந்தனர்.