/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எளிதாக இருந்தது கணித பாடம்; 34 ஆயிரத்து 74 பேர் பங்கேற்பு
/
எளிதாக இருந்தது கணித பாடம்; 34 ஆயிரத்து 74 பேர் பங்கேற்பு
எளிதாக இருந்தது கணித பாடம்; 34 ஆயிரத்து 74 பேர் பங்கேற்பு
எளிதாக இருந்தது கணித பாடம்; 34 ஆயிரத்து 74 பேர் பங்கேற்பு
ADDED : ஏப் 07, 2025 10:52 PM
கோவை; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நேற்று இடம்பெற்ற கணித பாடத்தை, 34 ஆயிரத்து, 74 பேர் எழுதினர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது மார்ச் 28 முதல் வரும், 15ம் தேதி வரை நடக்கிறது. தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களை அடுத்து, நேற்று கணித பாடத்துக்கான தேர்வு நடந்தது.
கோவை மாவட்டத்தில் தமிழ் வழிக்கல்வியில் பயின்ற, 11 ஆயிரத்து, 357 பேர், ஆங்கில வழிக்கல்வியில் பயின்ற, 23 ஆயிரத்து, 908 பேர் என, 35 ஆயிரத்து, 265 பேர் எழுத இருந்தனர்.
இவர்களில் தமிழ் வழியில் 10 ஆயிரத்து, 733 பேர், ஆங்கில வழியில், 23 ஆயிரத்து, 341 பேர் என, 34 ஆயிரத்து, 74 பேர் எழுதினர்; 1,191 பேர் எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில், 90 சதவீதம் பேர் கணிதம் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.
தேர்வர்கள் கூறுகையில், 'கணித பாட தேர்வு எளிதாக இருந்தது. பொதுத் தேர்வில் தொடர்ச்சியாக கேட்கப்பட்ட, ஐந்து மதிப்பெண் வினாக்கள் சில, இந்த முறையும் கேட்கப்பட்டிருந்தன. நல்ல மதிப்பெண் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது' என்றனர்.

