sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாத்தியோசியுங்க!ஆனைமலையில் நெல் சாகுபடி குறைந்ததால் விவசாயிகளிடம் வேளாண்துறை விழிப்புணர்வு

/

மாத்தியோசியுங்க!ஆனைமலையில் நெல் சாகுபடி குறைந்ததால் விவசாயிகளிடம் வேளாண்துறை விழிப்புணர்வு

மாத்தியோசியுங்க!ஆனைமலையில் நெல் சாகுபடி குறைந்ததால் விவசாயிகளிடம் வேளாண்துறை விழிப்புணர்வு

மாத்தியோசியுங்க!ஆனைமலையில் நெல் சாகுபடி குறைந்ததால் விவசாயிகளிடம் வேளாண்துறை விழிப்புணர்வு


ADDED : ஜன 26, 2024 11:33 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை: ஆனைமலை பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால், நெல் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதற்கு மாற்று பயிர்களை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆனைமலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 6,400 ஏக்கர் உள்ளது. ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவளங்கல், வடக்கலுார், பெரியணை மற்றும் அம்மன் கால்வாய் வழியாக நீர் வினியோகிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இருபோக சாகுபடிக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

ஆனைமலை பகுதியில் ஆண்டுதோறும் சராசரி மழையளவு, 900 மி.மீ., அளவாகும். ஆனால், கடந்தாண்டு, 707 மி.மீ., மழை தான் பெய்ததுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில், 408 மி.மீ., மழை பெய்தது; இது, 57 சதவீதமாகும். டிச., மாதத்தல் மூன்று நாட்களில், 150 மி.மீ., மழை பெய்தது.

பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் காரணமாக இயற்கை சீற்றம், வறட்சி, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுகிறது.

சாராசரியாக கடந்த மூன்று ஆண்டுகளாக, 1,000 ெஹக்டேர் பரப்பில் நெல் சாகுபடி நடந்தது. இந்தாண்டு பருவமழை பெய்யாதது, பாசனத்துக்கு நீர் பற்றாக்குறை காரணமாக, 300 ெஹக்டேர் மட்டுமே சாகுபடி செய்து, அறுவடை செய்யப்பட்டது.

இதனால், வைக்கோல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இந்நிலையில், நெல் சாகுபடி செய்ய முடியாத சூழலில், மாற்றுபயிர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் தேர்வு


ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:

நெல் பயிரிடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாற்றுப்பயிர் திட்டத்தில், சோளம், பயறு வகைகள் பயிரிட வேளாண்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில், 110 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டு சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு, 1,150 ரூபாய்; பயறு வகைகள் பயிரிடுவோருக்கு, 1,740 ரூபாய், ஏக்கருக்கு விதை, உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சானக்கொல்லி மற்றும் திரவ அங்கக உரம் அடங்கிய தொகுப்புடன் பின்னேற்பு மானியமும் வழங்கப்படுகிறது.

அதில், 2023 -24ம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களான கரியாஞ்செட்டிபாளையம், செட்டிபாளையம், ஜல்லிப்பட்டி, வாழைக்கொம்பு நாகூர், தென்சங்கம்பாளையம் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், 280 ெஹக்டேர் பரப்பில், திரவ உயிர் உரங்களை பயன்படுத்தும் போது மக்கிய தொழு உரத்துடன் கலந்து நிழலில் வைத்து பயிர் வளர்ச்சி, பூக்கும் பருவத்தில் பயிருக்கு இடும் வகையில், 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

தென்னங்கன்றுகள் குடும்பத்துக்கு, இரண்டு வீதம், 1,800 கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. 30 மின்கலத் தெளிப்பான்கள் மானியத்தில் வழங்கப்பட்டது.

தற்போது, விளை பொருட்களை சேமித்து வைக்க, 94 தார்பாலின்கள் தற்போது விரிவாக்க மைய கிடங்கில் தயார் நிலையில் உள்ளது. இதன் மொத்த விலை, 2,000 ரூபாயாகும். ஒரு தார்பாலினுக்கு மானியமாக, 830 ரூபாய் வழங்கப்படுகிறது.

பயன் பெறலாம்!


நெல்பயிர், தென்னை மற்றும் வாழை, காய்கறி பயிர்களை ஆரோக்கியமாக பராமரிக்கவும், வேர்கள் நன்கு பிடிக்கவும், துத்தநாக சல்பேட் சத்து இன்றியமையாதது. ஏக்கருக்கு, 10 கிலோ வீதம் பயிரின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் மண்ணில் இட வேண்டுமென பரிந்துரைக்கப்படுகிறது. மானிய விலையில், 10 கிலோ, 441 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

சிறு தானியங்களான, ராகி, கம்பு விவசாயிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், விதை, உயிர் உரங்கள், குருணை, அங்கக உரம் அடங்கிய தொகுப்புடன் பின்னேற்பு மானியம் சேர்த்து, ெஹக்டேருக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

நிலக்கடலை பயிரில் ஊடுபயிராக தட்டை பயிரிடும் விவசாயிகளுக்கு, 1,000 ரூபாய் மானியமாக ஒரு ெஹக்டேருக்கு வழங்கப்படுகிறது. பயிரிட ஆர்வம் உள்ள விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us