/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்தாப்பும், எண்ணெய் குளியலும்! என்னதான் இதன் பின்னணி?
/
மத்தாப்பும், எண்ணெய் குளியலும்! என்னதான் இதன் பின்னணி?
மத்தாப்பும், எண்ணெய் குளியலும்! என்னதான் இதன் பின்னணி?
மத்தாப்பும், எண்ணெய் குளியலும்! என்னதான் இதன் பின்னணி?
ADDED : அக் 30, 2024 11:56 PM

கோவை ; இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியே தீபாவளி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தீமை, அறியாமை விலகி, நன்மை, அறிவு பெருகும் நாளை, தீபாவளி குறிக்கிறது.
எண்ணெய் குளியல், புத்தாடை, பலகாரம் என தீபாவளியின் சம்பிராதயத்திற்கு, அர்த்தமான காரணங்கள் உண்டு. இன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதற்கு, கங்கா ஸ்நானம் என்றும் பெயர்.
அனைத்து நீர்நிலைகளிலும் கங்கையும், எண்ணெயில் லட்சுமி தேவியும் வாசம் செய்வார்கள் என நம்பப்படுகிறது.
எண்ணெய்க் குளியல் செய்பவர்களுக்கு, கங்கையில் குளித்த புனிதப்பயன் கிட்டும் என்பார்கள்.
குறிப்பாக, வெந்நீரில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால், பீடைகள் விலகி, புண்ணியம் உண்டாகும். லட்சுமியின் ஐஸ்வரியம் பெருகும் என்பதற்காகவே, பெரியோர்கள் எண்ணெய் குளியல் செய்யச்சொல்கிறார்கள்.
குளித்த பிறகு புத்தாடை அணிந்து, இறைவனையும், வீட்டு பெரியோர்களையும் வணங்க வேண்டும். வீட்டில் செய்த பலகாரங்களை, இறைவனுக்கு படைத்து பூஜிக்க வேண்டும்.
பின்னர், மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசு வெடிக்க வேண்டும். புரட்டாசி மாதத்தில், பூமிக்கு வந்த நம் முன்னோர்கள் மீண்டும், பித்ரு லோகத்துக்கு திரும்பும்போது, மத்தாப்புகள் வெளிச்சம் காட்டும் என சொல்லுவார்கள்.
அருகிலுள்ள கோவிலுக்கு, குடும்பத்தினருடன் சென்று வணங்கலாம். இன்று மாலை, லட்சுமி குபேர பூஜை செய்தால், ஐஸ்வரியம் பெரும், வியாபாரம் விருத்தியாகும் என நம்பப்படுகிறது.
தீபாவளியின் தெய்வீக ஒளி எல்லா இருளையும் விரட்டி, நம் வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்!

