ADDED : ஆக 03, 2025 09:20 PM

சூலுார்; சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சூலுார் திருச்சி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்களை, விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலம் எடுக்க வியாபாரிகளும் வந்திருந்தனர். அதிகபட்சமாக, கிலோ ஒன்றுக்கு, 68 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, கிலோ ஒன்றுக்கு 63 ரூபாய்க்கும் தேங்காய் ஏலம் போனது. தேங்காய்களுக்கு அதிக விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விற்பனை கூட கண்காணிப்பாளர் வாணி கூறுகையில்,சூலுார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. நேற்று, 11.66 குவிண்டால் எடை கொண்ட, 3 ஆயிரம் தேங்காய்கள் வந்தன. 80 ஆயிரத்து, 424 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
சுற்றுவட்டார விவசாயிகள், வியாபாரிகள் பலர் பங் கேற்று பயன் பெற்றனர், என்றார்.