ADDED : மே 01, 2025 11:46 PM
அ நிறம் | அளவு
அன்னுார்; மா. கம்யூ., சார்பில், அன்னுார் நகரில், ஓதிமலை ரோடு, கூத்தாண்டவர் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மே தின கொடியேற்று விழா நேற்று நடந்தது.
கட்சியின் ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தொழிற்சங்கங்கள் கடந்து வந்த பாதை, நடத்திய போராட்டங்கள், பெற்ற உரிமைகள் குறித்து பேசினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அர்ஜுன், தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவதன் அவசியம் குறித்து பேசினார்.
ஒன்றிய குழு உறுப்பினர்கள் மகேந்திரன், சுகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொன்னே கவுண்டன் புதூர், பச்சாபாளையம், ஒட்டர் பாளையம், முத்துக் குட்டி பாளையம் உள்பட 20 இடங்களில் கொடியேற்று விழா நடந்தது. பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
