/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்...பொங்கலோ பொங்கல்! அனைவர் வாழ்வும் செழிக்கட்டும்!
/
எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்...பொங்கலோ பொங்கல்! அனைவர் வாழ்வும் செழிக்கட்டும்!
எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்...பொங்கலோ பொங்கல்! அனைவர் வாழ்வும் செழிக்கட்டும்!
எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்...பொங்கலோ பொங்கல்! அனைவர் வாழ்வும் செழிக்கட்டும்!
UPDATED : ஜன 15, 2024 02:17 AM
ADDED : ஜன 15, 2024 02:12 AM

கோவை:நகரம், கிராமம் என்ற பாகுபாடுகளை களைந்து பாரம்பரியமும், பண்பாடும், கலாசாரமும் மாறாமல், பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
உழைக்கும் விவசாயிகளின் சொத்தான இயற்கையையும், குறைவின்றி அன்றாடம் ஒளி வெள்ளத்தை கொடுக்கும் சூரிய பகவானுக்கும், சகல ஜீவராசிகளுக்கும் நன்றி தெரிவிக்க, இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
'மார்கழி' முடிந்து 'தை' துவங்கும் நேரம். பழையன கழிந்து புதியன புகுவதை, போகி பண்டிகையாக நேற்று கொண்டாடப்பட்டது.
பழையதாகி தேவையில்லாத பொருளை தீயிட்டு எரித்து, வீட்டு முகப்பில் பூளைப்பூ, வேப்பிலை கொத்தை காப்பாக கட்டி, போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வாழை, பாக்கு, மஞ்சள், தோரணங்களை கட்டி, புதுப்பானையில் மஞ்சள் கொத்து கட்டி, முக்கரும்பு நட்டு, புத்தரிசியில், பால், நெய், வெல்லம் சேர்த்து புது அடுப்பில் கொதிக்க வைத்து, பொங்கலை பொங்கச்செய்து, சூரியனுக்கு படைத்து உற்றார், உறவினர்களை உபசரித்து, பொங்கல், கரும்பு உண்டு மகிழும் நாள் இன்று.
மழை பெய்து குளங்களிலும், ஓடைகளிலும் வெள்ளம் ததும்பி நிற்கிறது. இதனால், விவசாயம் மென்மேலும் செழிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் விவசாயிகள்.
லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. கோவைக்கு நல்ல ஆட்சியாளர்கள் கிடைத்து, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு இந்த பொங்கல் நன்னாளில் இறைவனை வேண்டிக்கொள்வதாக கூறுகிறார், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி.
அவரைப் போலவே இந்த பொங்கல் நன்னாளில், நம் அனைவரின் கனவுகளும் நிறைவேறட்டும் என நம்பிக்கை கொள்வோம். எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்; பயிர்கள் செழிக்கட்டும்; தொழில் வளம் பெருகட்டும்!