/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தகங்கள் இல்லாத நுாலகத்தை நேரில் ஆய்வு செய்த மேயர்
/
புத்தகங்கள் இல்லாத நுாலகத்தை நேரில் ஆய்வு செய்த மேயர்
புத்தகங்கள் இல்லாத நுாலகத்தை நேரில் ஆய்வு செய்த மேயர்
புத்தகங்கள் இல்லாத நுாலகத்தை நேரில் ஆய்வு செய்த மேயர்
ADDED : பிப் 01, 2024 12:00 AM

கோவை : ''புதிதாக திறக்கப்பட்டுள்ள நுாலகம் மற்றும் அறிவு சார் மையத்துக்கு, தேவையான புத்தகங்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள் வந்துவிடும்,'' என, கோவை மேயர் கல்பனா கூறினார்.
கோவை ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நூலகம் மற்றும் அறிவு சார் மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மையம், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி மையமாகும். இந்த நுாலகம் திறக்கப்பட்டு, ஒரு மாதம் ஆகியும் மாணவர்கள் படிக்க தேவையான நுால்கள் எதுவும் அங்கு இல்லை. மாணவ மாணவியர் வந்து பார்த்து, ஏமாந்து திரும்பிச் செல்கின்றனர்.
இது குறித்து, நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச் செல்வன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகநாதன் உள்ளிட்டோர், நேற்று நுாலகம் மற்றும் அறிவு சார் மையத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
இது குறித்து மேயர் கல்பனா கூறுகையில், ''போட்டித்தேர்வு மற்றும் ஆய்வு மாணவர்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக தான், இந்த நுாலகம் திறக்கப்பட்டுள்ளது. நுாலகத்துக்கு தேவையான நுால்கள், இன்னும் ஒரு வாரத்துக்குள் வந்து விடும்,'' என்றார்.