ADDED : மார் 17, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
கோவை: மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோருக்கு மாநகராட்சி சார்பில் கார் வழங்கப்பட்டு இருந்தது.தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால், அவர்களிடம் இருந்து கார்கள் திரும்பப் பெறப்பட்டன.
மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர், துணை மேயர், நிலைக்குழு தலைவர்கள் தனித்தனி அறை பயன்படுத்தினர். அவர்களின் அறைகள் மூடி சீலிடப்பட்டது. இதேபோல், மண்டல அலுவலகங்களில் மண்டல தலைவர்களுக்கு அறை கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த அறைகளும் திரும்பப் பெறப்பட்டு, தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
