/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்ந்து வரும் மரக்கன்றுகளை பராமரிக்க நடவடிக்கை
/
காய்ந்து வரும் மரக்கன்றுகளை பராமரிக்க நடவடிக்கை
ADDED : மார் 20, 2024 10:11 PM

உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதி கிராமப்பகுதிகளில், காய்ந்து வரும் மரக்கன்றுகளுக்கு நீரூற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கிராமப்பகுதிகளில் பசுமையை மேம்படுத்தவும், மழை வளத்தை அதிகரிப்பதற்கும் பணியாளர்கள் வாயிலாக, கிராமப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படுகிறது. ஒவ்வொரு நிதியாண்டிலும், ஒரு ஒன்றியத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உடுமலை ஒன்றியத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பான்மையான கிராமங்களில் அதற்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களும் மரக்கன்றுகளை கண்டுகொள்வதில்லை. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பல பகுதிகளில் மரக்கன்றுகள் வாடி, காய்ந்து வருகிறது.
இதனால் மரக்கன்றுகளை பராமரிப்பதற்கு, உடுமலை ஒன்றிய நிர்வாகத்தில் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காய்ந்து வரும் நிலையில் உள்ள பகுதிகளில் மரக்கன்றுகளுக்கு, தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரிப்பதற்கு ஊராட்சிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் வாயிலாக, தண்ணீர் ஊற்றுவதற்கான பணிகளையும் ஒன்றிய அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.

