ADDED : ஜன 27, 2026 05:01 AM
கோவை: பாதசாரிகளின் உயிரிழப்பை தடுக்கும் விதமாக தேவையான நடவடிக்கைகள் எடுக்க போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கோவையில் 2025ம் ஆண்டில், 1,160 சாலை விபத்துகளில், 274 பேர் உயிரிழந்தனர். 350 பாதசாரிகள் விபத்தில் சிக்கினர். இதில், 94 பேர் உயிரிழந்துள்ளனர். பாதசாரிகளுக்கு ரோட்டை கடக்க போதுமான வசதிகள் இல்லாததே இதற்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறுகையில்,''முக்கியமான ரோடுகளில் பாதசாரிகள் கடக்க போதிய வசதியில்லை. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிக்க அவிநாசி ரோட்டில் பாதசாரிகளுக்கு ரோட்டை கடக்க வழியில்லை. பாதசாரிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடை மேம்பாலம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த உள்ளனர். நடைமேம்பாலத்தில் மேலே ஏற லிப்ட்டுக்கு பதில், எஸ்க்லேட்டர்களை ஏற்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
