/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்வழித்தடங்களில் இறைச்சிக் கழிவுகள்
/
நீர்வழித்தடங்களில் இறைச்சிக் கழிவுகள்
ADDED : நவ 19, 2025 03:54 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், நீர்வழித்தடங்களில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை கண்டறிந்து தடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில், 50க்கும் மேற்பட்ட கோழி கடைகள், 30க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி கடைகள், 15க்கும் மேற்பட்ட மீன்கடைகள், 10க்கும் மேற்பட்ட மாட்டிறைச்சி கடைகளும் உள்ளன. வாரம்தோறும், இரண்டு டன் அளவிலான இறைச்சிகள் விற்கப்படுகின்றன.
ஆட்டிறைச்சி கடைகளில், அவற்றின் கழிவுகளை எளிதாக அகற்றுகின்றனர். ஆனால், மாட்டிறைச்சி கடைகளில், பெரிய அளவில் உள்ள எலும்புகள், குடலில் உள்ள கழிவுகளை மொத்தமாக மூட்டை கட்டி, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், நீர்வழித்தடங்களில் வீசுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
மக்களிடையே திடக்கழிவு மேலாண்மையில் விழிப்புணர்வு இல்லை. இதனால், திறந்தவெளியில் குப்பை வீசுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், கோழி மற்றும் மாட்டிறைச்சி கழிவுகளை, சமத்துார் பாலாறு ஆற்றுப்படுகை, மாக்கினாம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வீசிச் செல்கின்றனர். நகராட்சி நிர்வாகம், ஆடுவதை கூடம் அமைக்க முயற்சி எடுத்துள்ளதைபோல், மாடுகளுக்கு தனியாக வதை கூடம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

