/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்கிழக்கு ஆசிய 'ஐஸ் ஸ்கேட்டிங்' போட்டியில் கோவை வீரருக்கு பதக்கம்

ADDED : செப் 30, 2024 11:42 PM

கோவை : தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில், கோவை வீரர் மூன்று வெண்கல பதக்கங்கள் வென்று, பெருமை சேர்த்துள்ளார்.
தென் கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டிகள் கடந்த, 28 மற்றும், 29ம் தேதிகளில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்தது.
இதில், இந்தியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சீனா, மங்கோலியா, சிங்கப்பூர் உட்பட, 11 நாடுகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.
இந்திய அணி சார்பில் பங்கேற்ற கோவை, சின்னதடாகத்தை சேர்ந்த பிரணவ் அருண்பிரசாத் 'ஜூனியர்-ஏ' பிரிவில்(17-19 வயது பிரிவு ) 500, 1,000 மற்றும் 1,500 மீ., போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
மூன்று வெண்கல பதக்கங்களை வென்றுள்ள இவர், தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு விளையாடிய ஒரே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.