/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச கராத்தே போட்டியில் கோவை மாணவர்களுக்கு பதக்கம்
/
சர்வதேச கராத்தே போட்டியில் கோவை மாணவர்களுக்கு பதக்கம்
சர்வதேச கராத்தே போட்டியில் கோவை மாணவர்களுக்கு பதக்கம்
சர்வதேச கராத்தே போட்டியில் கோவை மாணவர்களுக்கு பதக்கம்
ADDED : ஜன 31, 2024 11:53 PM
கோவை : சார்ஜாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில், கோவை வீரர் வீராங்கனைகள் ஒன்பது பதக்கங்கள் வென்று அசத்தினர்.
சர்வதேச அளவிலான கராத்தே போட்டி, சார்ஜாவில் ஜன.,28ம் தேதி நடந்தது. இப்போட்டியில் 12 நாடுகளை சேர்ந்த, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
இதில் கோவையை சேர்ந்த எட்டு பேர் பங்கேற்று, ஆறு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றனர்.
வெற்றி பெற்றவர்கள்
கார்த்திகேயன் (சைதன்யா) இரண்டு தங்கம், ஜெய் தேவ் (கே சிர்ஸ்), அபிலாஷ் (டாப்ஸ்), நிஷ்வந்த் (டாப்ஸ்), ஆகியோர் தலா ஒரு தங்கம், ஹரிபிரகாஷ் (ஆதித்யா கல்லுாரி) ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஹரிணி(ஐன்ஸ்டைன் பள்ளி) ஒரு வெள்ளி, சித்தார்த் (டாப்ஸ்) ஒரு வெண்கலம் வென்றனர். வெற்றி பெற்றவர்களை, பயிற்சியாளர் ரவிக்குமார் பாராட்டினார்.