நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் நடத்தப்பட்ட முகாமை, பேரூராட்சி தலைவர் விஷ்வ பிரகாஷ் துவக்கி வைத்தார். செயல் அலுவலர் நந்தகுமார், துப்புரவு ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.ஆர். மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற பணியாளர்களுக்கு எக்கோ, இ.சி.ஜி., ரத்த பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்கினர். முகாமில், பேரூராட்சி கவுன்சிலர்கள் சவுந்தர்யா, அம்பிகா, ஜனனி உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

