/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
ADDED : நவ 06, 2024 11:42 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் வசிக்கும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று வியாழக்கிழமை நடக்கிறது.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த உள்ளடங்கிய கல்வித் திட்டம் மற்றும் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம் ஆகியன இணைந்து, 1 முதல், 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நடத்துகிறது. இன்று காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பங்கேற்று, தகுதி வாய்ந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குகிறார்.
தகுதி உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முகாமுக்கு வரும்போது ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ், வங்கி பாஸ்புக் ஜெராக்ஸ், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வர வேண்டும். இத்தகவலை, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம் ஒருங்கிணைந்த கல்வி திட்ட வட்டார மேற்பார்வையாளர் தெரிவித்தார்.