/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ முகாம் நாளை நடக்கிறது
/
மருத்துவ முகாம் நாளை நடக்கிறது
ADDED : ஜன 12, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இலவச பொது மருத்துவ முகாம் நாளை (13ம் தேதி) நடக்கிறது.
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி, செம்பாக்கவுண்டர் காலனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பொள்ளாச்சி அரிமா சங்கம் மற்றும் கருணா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சார்பில், நாளை (13ம் தேதி) இலவச பொது மருத்துவ முகாம் நடக்கிறது.
முகாமில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, பெண்கள் நலம், குழந்தைகள் நலம் மற்றும் எலும்பியல் மருத்துவம், கண் நல மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இ.சி.ஜி., ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் போன்றவைகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.