/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் துவங்கியது
/
துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் துவங்கியது
துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் துவங்கியது
துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் துவங்கியது
ADDED : செப் 18, 2024 10:50 PM

கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, சிறப்பு மருத்துவ முகாம் நேற்று துவங்கியது; நாளை (20ம் தேதி) வரை நடக்கிறது.
கோவை மாநகராட்சியில், 6,000க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களது நலன் காக்க, கே.ஜி., மருத்துவமனை மற்றும் கோயமுத்துார் ஐகான்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில், நேற்று சிறப்பு மருத்துவ முகாம் துவக்கப்பட்டது; மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்தை சேர்ந்த, துாய்மை பணியாளர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் நாளான நேற்று, 350 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்றும் (செப்., 19), நாளையும் (செப்., 20) தொடர்ந்து இம்முகாம் நடைபெறுகிறது.
முகாமை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கலெக்டர் (பயிற்சி) மதுஅபிநயா, துணை மேயர் வெற்றிச்செல்வன், கவுன்சிலர் ஷர்மிளா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், பேப்ஸிமியர் பரிசோதனை, பிஸியோதெரபி உள்ளிட்ட பொது மருத்துவம் மற்றும் புற்றுநோய்க்கான பாதிப்பு இருக்கிறதா என்பது தொடர்பான, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அடுத்த கட்டமாக, தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மண்டல பகுதிகளில், தனித்தனியாக முகாம்கள் நடத்த, மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

