/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்வு
மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்வு
மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : நவ 11, 2025 12:57 AM

கோவை: கோவை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நேற்று, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி தலைமை தாங்கினார். துணை முதல்வர் டாக்டர் சுஜாதா, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன் உட்பட 250க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களான டாக்டர்கள் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், டாக்டர் நரேந்திரன் (அரவிந்த் கண் மருத்துவமனை) சங்கத்தின் தலைவராகவும், டாக்டர் கனகராஜன் (தலைமை மயக்க மருந்து நிபுணர், கோவை மருத்துவக் கல்லூரி) செயலராகவும், டாக்டர் செந்தில்நாதன் (மயக்க மருந்து நிபுணர், -கோவை மருத்துவக் கல்லூரி) பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழக பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, கோவை மருத்துவக் கல்லூரி வளர்ச்சி குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு, கல்லூரியின் 60ம் ஆண்டு வைர விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து, புதிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

