/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ கண்காட்சி கொடிசியாவில் துவக்கம்
/
மருத்துவ கண்காட்சி கொடிசியாவில் துவக்கம்
ADDED : நவ 14, 2025 10:11 PM

கோவை: பாயன்ட் மீடியாவின் 54வது கண்காட்சியாக, 'மெடிக்கான் 2025' பதிப்பு - மூன்று, மெகா பி2பி மருத்துவ கண்காட்சிஅவிநாசி ரோடு, கொடிசியா வளாகத்தில் நேற்று துவங்கியது.
இது, முன்னணி மருத்துவ உபகரண உற்பத்தியாளர்கள், மருத்துவமனை சப்ளையர்கள், சுகாதார தொழில்நுட்ப வழங்குனர்கள் மற்றும் மருந்து நிறுவனங்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கும் ஒரு விரிவான கண்காட்சியாகும்.
புதுமையான மருத்துவ தயாரிப்புகள், மருத்துவமனை தளவாடங்கள், நோயறிதல் கருவிகள் மற்றும் சுகாதார தீர்வுகளை காட்சிப்படுத்தும், 120க்கு மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன. வரும் 16ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியை, இலவசமாக பார்வையிடலாம்.
கண்காட்சியை, கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம், பி.பி.எஸ்.டி., மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் மற்றும் கொங்குநாடு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு துவக்கி வைத்தனர்.

