/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்
/
மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஜன 10, 2024 10:20 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சமுதாய நலக்கூடத்தில், மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட சமுதாய நலக்கூடத்தில், 9 முதல் 11ம் தேதி (இன்று) வரை மூன்று நாட்கள் மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
முகாமை கோவை கலெக்டர் கிராந்தி குமார் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார். இதில், உதவி இயக்குனர் (பேரூராட்சி) துவாரகாநாத் சிங், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
முகாமில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரியின் ஆரோக்கிய திட்டம், சுய உதவி குழுக்கள் உருவாக்குதல், சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் புதிய தொழில் தொடங்க கடன் உதவி போன்றவற்றுக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று விண்ணப்பித்தனர்.