/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனை சமையலறையை தினமும் ஆய்வு செய்ய மருத்துவ அலுவலருக்கு உத்தரவு
/
அரசு மருத்துவமனை சமையலறையை தினமும் ஆய்வு செய்ய மருத்துவ அலுவலருக்கு உத்தரவு
அரசு மருத்துவமனை சமையலறையை தினமும் ஆய்வு செய்ய மருத்துவ அலுவலருக்கு உத்தரவு
அரசு மருத்துவமனை சமையலறையை தினமும் ஆய்வு செய்ய மருத்துவ அலுவலருக்கு உத்தரவு
ADDED : மார் 27, 2025 12:16 AM
கோவை; கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த, தினமும் சமையலறையை ஆய்வு செய்ய வேண்டும் என, அலுவலர்களுக்கு டீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில், சிகிச்சை பெற்று வருவோருக்கு மருத்துவமனை சார்பில் உணவு வழங்கப்படுகிறது. உணவு தயாரிக்க, மருத்துவமனை வளாகத்திலேயே நவீன சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. நேயாளிகளுக்கு தினமும், காலை உணவு, ஜூஸ், மதிய உணவு, ஸ்நாக்ஸ், இரவு உணவு வழங்கப்படுகிறது.
வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு, அந்தந்த நேரத்தில் பணியாளர்கள் பாக்கெட்களில் எடுத்து சென்று வினியோகிக்கின்றனர். உணவு பக்கெட்களில் மூடி இல்லாமல், சுகாதாரமற்ற முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. உணவு பக்கெட்களை, நோயாளிகளை அழைத்து செல்லும் சக்கர நாற்காலியில் எடுத்து செல்கின்றனர்.
இது தொடர்பாக, 'கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரம் என்ன விலை' என்ற தலைப்பில் நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, நமது செய்தியை குறிப்பிட்டு, 'நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக, இருப்பிட மருத்துவ அலுவலர் மற்றும் உதவி இப்பிட மருத்துவ அலுவலர், சமையலறையை தினமும் ஆய்வு செய்து, சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சர் ஆகியவற்றை, நோயாளிகளை அழைத்துச் செல்ல மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, மருத்துவமனை டீன் நிர்மலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.