விளையாடும் போது ஏற்படும் காயங்களுக்கு மருத்துவ தீர்வு
விளையாடும் போது ஏற்படும் காயங்களுக்கு மருத்துவ தீர்வு
ADDED : மார் 19, 2026 06:22 PM
கோவை:ஆர்த்தோ ஒன் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை இணைந்து, மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்த்தினருக்கான விளையாட்டு மருத்துவ தொடர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
ஆர்த்தோ ஒன் எலும்பியல் சிறப்பு மைய தலைவர் டேவிட் ராஜன் பேசுகையில்,'' விளையாட்டு மருத்துவம் சார்ந்த துறையில், நிபுணத்துவம் பெற, சில அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வீரர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். அப்போது தான், காயம் ஏற்படாமல் தடுப்பதோடு, வீரர்களின் ஆர்வத்திற்கு மருத்துவ ரீதியாக துணை நிற்க முடியும்,'' என்றார்.
இதில், எலும்பியல் மற்றும் விளையாட்டு மருத்துவத் துறையைச் நிபுணர்களின் அறிவியல் கருத்தரங்கு நடந்தது. தோள்பட்டை மற்றும் முழங்கை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷியாம் சுந்தர், டாக்டர் எமில் சிரில், தலைமை பிசியோதெரபி சிகிச்சையாளர் எர்னஸ்ட் பால், முழங்கால் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்தோஷ் சஹானந்த், முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
