/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு மருத்துவ சிகிச்சை
/
உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு மருத்துவ சிகிச்சை
உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு மருத்துவ சிகிச்சை
உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு மருத்துவ சிகிச்சை
ADDED : ஆக 26, 2025 10:32 PM

மேட்டுப்பாளையம்; சிறுமுகை விஸ்கோஸ் ஆலை வளாகத்தில், உடல்நலம் பாதித்த யானைக்கு, வனத்துறையினர் சத்தான உணவுப் பொருட்கள், மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.
சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை காப்புக்காடு வனப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் விஸ்கோஸ் ஆலை உள்ளது.
இதன் அருகே ஒரு ஆண் யானை உடல் மெலிந்த நிலையில், சுற்றுவதை சிறுமுகை வனப் பணியாளர்கள் பார்த்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சென்று யானைக்கு சிகிச்சை மற்றும் உணவுகள் அளித்து வரு கின்றனர்.
இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறியதாவது;
யானையின் உடலில் காயங்கள் இல்லை. முள் புதரில் இருந்து பவானி ஆற்றுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு, மீண்டும் முள் புதருக்குள் சென்று விடுகிறது.
இரை தேடி அதிக தூரம் செல்லாமல், சிறிது தூரம் மட்டும் சென்று வருகிறது. இதனால் யானையின் உடலின் உள்ளே ஏதோ பாதிப்பு இருப்பது தெரிகிறது.
அதனால் யானைக்கு தென்னை மட்டைகள், தீவனப் பயிர்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. மருத்துவ குழுவினர் முதல் சிகிச்சையாக, யானைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய, மருந்து, மாத்திரைகள் வலி நிவாரண மாத்திரைகள், குடற் புழு நீக்க மாத்திரை கள் மற்றும் கல்லீரல் புத்துணர்வு வைட்டமின் டானிக் ஆகியவற்றை தர்பூசணி, வாழைப்பழங்கள் ஆகியவற்றின் வாயிலாக கொடுத்து வருகிறார்கள். மேலும் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.