/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் வளாகத்தில் மருத்துவ கழிவு குவிப்பு
/
கோவில் வளாகத்தில் மருத்துவ கழிவு குவிப்பு
ADDED : ஜன 23, 2025 11:35 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை மருந்து மற்றும் குப்பை கழிவு, கோவில் வளாகத்தில் கொட்டப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு தினமும், நூற்றுக்கணக்கானோர் சளி, காய்ச்சல் சிகிச்சைக்கும், மருத்துவ ஆலோசனைகள், உடல் உபாதைகளை குறித்து மருத்துவரிடம் ஆலோசித்து செல்கின்றனர்.
இங்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. இந்த மருந்துகளின் அட்டைகள், பேக்கிங் செய்யப்பட்ட கவர்கள், கண்ணாடி பாட்டில்களால் ஆன ஊசி மருந்துகள், காலாவதியான மாத்திரை போன்றவைகளை முறையாக அகற்றாமல், மருத்துவமனை அருகே உள்ள கோவில் வளாகத்தில் கொட்டப்பட்டுள்ளது.
மக்கள் கூறியதாவது:
மருத்துவமனை கழிவுகளை முறையாக அகற்றம் செய்யாமல், கோவில் வளாகத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் அதிகளவு செடி கொடிகள் இருப்பதால் இங்கு கொட்டப்படும் மருத்துவ கழிவு யாருக்கும் தெரிவதில்லை.
மேலும், கோவிலுக்கு உட்பட்ட இடத்தில் மருத்துவக் கழிவு கொட்டப்படுவது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே, மருத்துவமனை நிர்வாகம் இதை உடனடியாக கவனித்து மருத்துவக் கழிவை கோவில் வளாகத்தில் கொட்டாமல் முறையாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

