/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரும்பபாளையம் குளத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
/
குரும்பபாளையம் குளத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
குரும்பபாளையம் குளத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
குரும்பபாளையம் குளத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
ADDED : நவ 17, 2025 12:26 AM

அன்னுார்: குரும்பபாளையம் குளத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், 30 ஏக்கர் பரப்பளவு உள்ள குரும்பபாளையம் குளம் உள்ளது. இந்த குளத்தில் மழை நீர் தேங்கினால், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10 கிராமங்கள் பயன்பெறும்.
இந்த குளத்திற்கு மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து அதிக அளவில் மழைநீர் வருகிறது. அத்திக்கடவு திட்டத்தில் இந்த குளத்தை சேர்க்க இப்பகுதி மக்கள் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்த குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், பாட்டில்கள், இறைச்சி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. குளத்திற்கு மழை நீர் வரத்து அதிகரிக்கும். இந்நிலையில் இந்த கழிவுகளால் குளத்தில் தேங்கும் நீர் எதற்கும் பயன்படாது. மாசுபடும். இத்துடன் அருகில் உள்ள தோட்டங்களிலும் நிலத்தடி நீரும் மாசுபடும். எனவே, குளத்தில் குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். குப்பை கொட்டுவோரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

