
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். பள்ளியின் கல்வி இயக்குனர் குணசேகர், குழந்தைகள் தின விழாவின் வரலாறு மற்றும் தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ராமலிங்கம், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குழந்தைகள் மனம் மகிழ மேஜிக் ஷோ நடத்தி, கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கார்த்திக் கலந்து கொண்டார். தமிழாசிரியர்கள் விவேகானந்தன், கார்த்திக் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். தமிழ் ஆசிரியை சொர்ணா நன்றி கூறினார்

