/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ கழிவை மற்ற கழிவோடு வீசக்கூடாது: கமிஷனர் எச்சரிக்கை
/
மருத்துவ கழிவை மற்ற கழிவோடு வீசக்கூடாது: கமிஷனர் எச்சரிக்கை
மருத்துவ கழிவை மற்ற கழிவோடு வீசக்கூடாது: கமிஷனர் எச்சரிக்கை
மருத்துவ கழிவை மற்ற கழிவோடு வீசக்கூடாது: கமிஷனர் எச்சரிக்கை
ADDED : நவ 27, 2024 09:27 PM
பொள்ளாச்சி; 'திறந்தவெளியில், மருத்துவ கழிவுகளை மற்ற கழிவுகளோடு போடக்கூடாது,' என நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. ஒரு சில மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ கழிவுகளை திறந்தவெளியில் குப்பையோடு, குப்பையாக வீசுவதாக புகார் எழுந்தது.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கான ஆலோசனை கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:
பொள்ளாச்சி நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. கழிவுகளை தரம் பிரித்து வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மற்ற கழிவுகளோடு, மருத்துவ கழிவுகளை வீசும் போது அவற்றை எடுக்கும் துாய்மை பணியாளர்களின் கைகளை ஊசி உள்ளிட்டவை பதம் பார்க்கவும், நோய் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, இதுபோன்று கழிவுகளை திறந்தவெளியில் வீச வேண்டாம். மருத்துவ கழிவுகளை கையாளும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் வாயிலாக மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும்.
எக்காரணம் கொண்டும் நகராட்சி பணியாளர்கள் சேகரிக்கும் கழிவுகளில் கலைக்க கூடாது. கழிவுநீரை திறந்தவெளி கால்வாயில் விடக்கூடாது. பாதாள சாக்கடை திட்ட இணைப்பு பெற்று அதன் வாயிலாக அப்புறப்படுத்த வேண்டும்.
வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிறுத்த வேண்டும். அனைத்து தனியார் மருத்துவமனைகளும், நகராட்சியில் சுகாதாரச்சான்று பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.