/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் கைவசம் உள்ளன'
/
'முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் கைவசம் உள்ளன'
ADDED : மார் 31, 2025 11:21 PM
கோவை; ''கோவை மாவட்டத்தில் செயல்படும் முதல்வர் மருந்தகங்களில், தேவையான மருந்துகள் பெறப்பட்டு, மக்களுக்கு வழங்கப்படுகின்றன,'' என, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்., 24 முதல் 1,000 இடங்களில், முதல்வர் மருந்தகங்கள், கூட்டுறவு துறை சார்பில் திறக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் செயல்படும் முதல்வர் மருந்தகங்களில், தேவையான மருந்துகள் பெற்று வழங்கப்படுவதாக, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், கூட்டுறவு சங்கம் வாயிலாக 22, தனியார் வாயிலாக 20 என, முதல்வர் மருந்தகங்கள் செயல்படுகின்றன. 206 வகையான மருந்துகளில், 190 வகையான மருந்துகள், முதல்வர் மருந்தகங்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன.
அதாவது, 90 சதவீதம். மீதமுள்ள 10 சதவீத மருந்துகள், தயாரிப்பு நிலையில் உள்ளன. அவையும் விரைவில் வந்து விடும். கூடுதலாக என்ன தேவையோ, அதன் பட்டியலையும் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.