/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., கல்லுாரியில் ஒரு 'நண்பேன்டா' சந்திப்பு!
/
பி.எஸ்.ஜி., கல்லுாரியில் ஒரு 'நண்பேன்டா' சந்திப்பு!
பி.எஸ்.ஜி., கல்லுாரியில் ஒரு 'நண்பேன்டா' சந்திப்பு!
பி.எஸ்.ஜி., கல்லுாரியில் ஒரு 'நண்பேன்டா' சந்திப்பு!
ADDED : ஜூலை 12, 2025 01:16 AM

கோவை; ''ஹலோ எப்படி இருக்கீங்க,''
''காலேஜ்ல படிக்கிறப்போ மாமா, மாப்ளன்னு தானே பேசிக்குவோம். இப்ப என்ன புதுசா வாங்க, போங்கன்னு மரியாதை கொடுக்குற''
''இல்லப்பா... இப்ப உனக்கு வயசு ஆகிருச்சு. பேரன், பேத்தி எல்லாம் எடுத்துட்ட. பிசினஸ் எல்லாம் பண்ணி பெரிய இடத்துல இருக்க. இன்னும் மரியாதை இல்லாம பேச முடியுமா,''
''ஹேய், எத்தனை வயசு ஆனாலும், எத்தனை உயரத்துக்கு போனாலும், நீ எப்பவும் என் பிரண்ட் தான்பா. நமக்குள்ள என்ன மரியாதை,''
- - பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியில், 1955 - -59ல் படித்த முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அந்த கூட்டத்தில்தான் இந்த டயலாக்!
காலம் எத்தனை ஆனாலும், வயது எத்தனை ஆனாலும், தோளில் கை போட்டு பேசக்கூடிய ஒரே ஆள் நண்பன் தான். கல்லூரியில் சேர்ந்து, 70 ஆண்டுகள் முடிந்ததை தொடர்ந்து, பிளாட்டினம் ஆண்டு சந்திப்பு நடந்தது. இதில், 11 பேர் சந்தித்து தங்களது கல்லுாரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். வெளிநாடுகளில் உள்ள 19 முன்னாள் மாணவர்கள் வீடியோ கால் வழியாக பங்கேற்றனர். இவர்களில் பலரும், பல்வேறு உயர் அரசு பதவிகளில் இருந்தவர்கள். இந்திய தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் வரதராஜனும் அதில் ஒருவர்!