/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
25 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் சந்திப்பு
/
25 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் சந்திப்பு
ADDED : ஜூலை 16, 2025 10:45 PM

கோவை; ஈரோடு, சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப நிறுவனத்தில், 1996ம் ஆண்டு பேட்ச் வெள்ளி விழா துவக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வு நடந்தது.
1996- -2000ம் ஆண்டு முன்னாள் மாணவர்களுக்கு இது ஒரு நினைவுப் பயணமாக அமைந்தது. கொண்டாட்டத்திற்கு முன்னதாக, மாணவர்- முன்னாள் மாணவர் தொடர்பு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. தலைவர் பாலசுப்பிரமணியம் மாணவர்களிடையே , தனது ஊக்கமளிக்கும் பயணம் மற்றும் தனது வெற்றிக்கான மதிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
''முன்னாள் மாணவர்களின் வெற்றியும் வளர்ச்சியும், கல்லூரி வழங்கிய மதிப்புகளுக்கு ஒரு சான்றாக நிற்கிறது,'' என்றார் அவர்.
கல்லூரி கால பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட முன்னாள் மாணவர்கள், குழுப்புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.