/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தள்ளு வண்டி உணவு கடைகளுக்கு இலவச உரிமம் வழங்க மெகா முகாம்: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு

ADDED : அக் 25, 2024 10:11 PM
கோவை: தள்ளு வண்டி உணவு கடைகளுக்கு, இலவச உரிமம் வழங்குவதற்கான மெகா முகாம் நடத்த, உணவு பாதுகாப்புத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:
கோவையில் தள்ளு வண்டி உணவு கடைகள் அதிகம் உள்ளன. அவர்களின் ஏழ்மையை கருத்தில் கொண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், உணவு பாதுகாப்பு உரிமம் (லைசன்ஸ்) இலவசமாக வழங்கப்படுகிறது.
உரிமம் பெற வியாபாரிகள், https://foscos.fssai என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். அதேபோல, இந்திய உணவுப் பாதுகாப்பு துறையால்(புட் சேப்ட்டி மித்ரா) அங்கீகரிக்கப்பட்ட கோவை மாவட்ட முகவர்களால், சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, ஏதாவது ஆவணங்கள் தவறாகவோ அல்லது போதுமானதாகவோ இல்லாமல் இருந்தால், திருப்பி அனுப்பப்படும். ரத்து செய்யப்படாது. உணவு பாதுகாப்பு உரிமம், தட்கல் முறையிலும் வழங்கப்படுகிறது. இதனை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். அவர்களின் கடைகளில் ஆய்வு செய்து, உரிமம் ரத்து செய்யப்படும்.
தள்ளு வண்டி உணவு கடைகளுக்கு, அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம், இலவச உரிமம் வழங்குவதற்கான மெகா முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாமில், வியாபாரிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சார்ந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. உணவு பொருட்களில் லேபிள் ஒட்டுவது, உணவின் தரம் கண்டுபிடிப்பது போன்ற பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.