sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மெகா ரேக்ளா பந்தயம்

/

தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மெகா ரேக்ளா பந்தயம்

தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மெகா ரேக்ளா பந்தயம்

தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மெகா ரேக்ளா பந்தயம்


ADDED : ஜன 26, 2024 01:33 AM

Google News

ADDED : ஜன 26, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்;கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், 28ல் மோடி ரேக்ளா, பந்தயம் நடக்கிறது.

வெள்ளலூர் அருகே எல் அண்ட் டி பை-பாஸ் சாலையில் அ.தி.மு.க., ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து தி.மு.க., ஆட்சியில் முதலாம் ஆண்டு மட்டும் ஜல்லிக்கட்டு நடந்தது. கடந்தாண்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. அதே நிலைதான் இவ்வாண்டும் நீடிக்கிறது.

இந்நிலையை மாற்றும் வகையில் ஜல்லிக்கட்டுக்கு மாற்றாக கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மோடி ரேக்ளா பந்தயம் நாளை மறுநாள் (28ம் தேதி), எல் அண்ட் டி பை- பாஸ் சாலையில், கள்ளப்பாளையம் பிரிவு அருகே நடக்கவுள்ளது. மாவட்ட தலைவர் வசந்தராஜன் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

வசந்தராஜன் கூறியதாவது:

கோவை மாவட்ட மக்கள் ஜல்லிக்கட்டுக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்துள்ளனர். அதற்கு மாற்றாக, 400 வண்டிகள் பங்கேற்கும் பெரிய அளவிலான மோடி ரேக்ளா பந்தயத்தை நடத்த முடிவு செய்து, இன்று (நேற்று) பூமி பூஜை போடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி எம்.பி., தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து அதிகளவு வண்டிகள் பங்கேற்கின்றன. மேலும் ஈரோடு, சேலம், தாராபுரம் என கொங்கு மண்டலத்திலிருந்தும் வண்டிகள் கலந்துகொள்கின்றன.

ஆறு பல்லுக்குட்பட்ட மாடுகளுக்கு, 200 மீட்டர் தூரமும், ஆறு பல்லுக்கு மேற்பட்டவைகளுக்கு, 300 மீட்டர் தூரமும் பந்தய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

200 மீட்டர் தூரத்தில் முதலிடம் பிடிக்கும் வண்டிக்கு கார், 300 மீட்டர் தூரத்தில் முதலிடம் பிடிக்கும் வண்டிக்கு புல்லட் பரிசாக வழங்கப்படும். மேலும், 50 கிராம் அளவிற்கு தங்க நாணயங்களும், ஒரு கிலோ அளவிற்கு வெள்ளி நாணயங்களும், கோப்பைகளும் பரிசாக வழங்கப்படுகிறது.

முதல் முறையாக பார்வையாளர்கள் அமர காலரி அமைக்கப்படுகிறது.

காலை முதல் போட்டியாளர்கள், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கப்படும். மாநில தலைவர் அண்ணாமலை பரிசுகளை வழங்க உள்ளார்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us