/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலைக் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
அரசு கலைக் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஏப் 17, 2025 07:13 AM
கோவை; கோவை அரசு கலைக் கல்லுாரி சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை மற்றும் கோவை மினர்வா கல்வி அகாடமி இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக, மாணவர்களின் மேம்பாட்டுக்காக அழகப்பா பல்கலையின் கீழ், அலுவலக ஆட்டோமேஷனில், சான்றிதழ் படிப்பு உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட சான்றிதழ் திட்டங்களை செயல்படுத்த முடியும்.
கல்லுாரி முதல்வர் எழிலி, மினர்வா கல்வி அறக்கட்டளை தலைவர் சுஜாதா, செயலாளர் விஜய்ஜோசப் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை தலைவர் சங்கீதா வரவேற்றார். உதவி பேராசிரியர் ஜெயாமணி, தாமரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.