/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகுணா கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
சுகுணா கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : மே 15, 2025 11:47 PM

கோவை; சுகுணா கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் எல்.எஸ்.போக்கஸ் 4டி கெரியர் எஜுகேஷன் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கோவை நேருநகர் காளப்பட்டியில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி செயலாளர் சேகர், எப்.ஏ.சி.இ., முதன்மை செயல் அலுவலர் கார்த்திக் ராஜா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.கல்வி கற்றல், தொழிற்துறை தேவைகளுக்கு இடையேயான இடைவெளியை குறைத்து தேவையான திறன்கள் மற்றும் வளங்களுடன் மாணவர்களை உருவாக்கும் நோக்கோடு ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களின் எதிர்காலத்தை திறம்பட நிர்ணயிப்பதில் எப்.ஏ.சி.இ., முக்கிய பங்கு வகிக்கும். இதில், கல்லுாரி முதல்வர் ராஜ்குமார், மனிதவள மேலாளர் செந்தில் அருண் பங்கேற்றனர்.