/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு
/
கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு
கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு
கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு
ADDED : டிச 06, 2024 04:47 AM

கோவை : கோவை ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லுாரியின் மெக்கானிக்கல் இன்ஜூனியரிங் துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு கல்லுாரி அரங்கில் நடந்தது. கல்லுாரி தலைவர் முருகேசன் தலைமைவகித்தார்.
கல்லுாரி வளாகத்தில் 100 கிலோவாட் சூரிய மின்நிலையம் நிறுவுவது தொடர்பாகவும், சூரிய மின் உற்பத்தியில் உள்ள வேலைவாய்ப்புகள் மையமாக கொண்டும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
கல்லுாரி மற்றும் பி அண்டு பி.கே., சோலார் சொல்யூசன் தனியார் நிறுவனத்தில் நிர்வாகிகள் கையெழுத்திட்டு கோப்புகளை மாற்றிக்கொண்டனர். நிகழ்வில், பி அண்டு பி.கே., சோலார் சொல்யூசன் தனியார் நிறுவன துணைத்தலைவர் பிரதீப் நாயர், கல்லுாரி தாளாளர் தமிழரசி முருகேசன், கல்லுாரி முதல்வர் ஞானமூர்த்தி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.