ADDED : ஜூன் 29, 2025 11:54 PM
மேட்டுப்பாளையம்; நீலகிரி கூட்டுறவு இயக்கத்தின் தந்தை ராவ்பகதூர் ஆரிகவுடரின் 54வது நினைவு தினம், மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன் தலைமை வகித்து, ஆரி கவுடரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின் அவர் பேசுகையில்,நீலகிரி கூட்டுறவு இயக்கம் உருவாக காரணமாக இருந்தது, மாபெரும் தலைவர் ஆரி கவுடர் தான். நீலகிரி மாவட்ட மக்கள் கல்லூரி படிப்பை நீலகிரியிலேயே பெற்றிட வேண்டும் என்பதனை குறிக்கொளாக கொண்டு, ஊட்டியில் அரசு கலை அறிவியல் கல்லூரியை பெற்று தந்த பெருமையும் இவரையே சேரும், என்றார்.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேலாளர் நிசார், துறை அலுவலர்கள், சங்கப் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.