ADDED : செப் 24, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: மேட்டுப்பாளையம் ரோடு, சுப்பிரமணியம்பாளையத்தில் சசிகுமாருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த சுப்பிரமணியம்பாளையம் சக்ர விநாயகர் கோவில் அருகே, ஹிந்து முன்னணி சார்பில் புஷ்பாஞ்சலி நடந்தது. ஜி.என்.மில்ஸ் பிரிவிலிருந்து ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில், மோட்ச தீபம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். சசிகுமார் உருவப்படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
