/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிகழ்ச்சி அல்ல நினைவுகள்! அசத்தும் 'ஏ டூ ஸீ' கார்த்திக்
/
நிகழ்ச்சி அல்ல நினைவுகள்! அசத்தும் 'ஏ டூ ஸீ' கார்த்திக்
நிகழ்ச்சி அல்ல நினைவுகள்! அசத்தும் 'ஏ டூ ஸீ' கார்த்திக்
நிகழ்ச்சி அல்ல நினைவுகள்! அசத்தும் 'ஏ டூ ஸீ' கார்த்திக்
ADDED : அக் 13, 2024 10:31 PM

குரலிலும், உடலிலும் உற்சாகம் தொற்றிக் கொள்ள வைக்கிறது, கார்த்திக் கன்சால்வெஸ்ஸின் பேச்சு. எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும், சட்டென கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு வந்து விடுகிறார்.
கோவை இளசுகளுக்கு 'ஏ டூ ஸீ பார் ஈவன்ட்ஸ்' கார்த்திக் என்றால் தனி அறிமுகம் தேவையில்லை. பெரும்பாலான கொண்டாட்ட நிகழ்வுகளை, அவற்றின் உற்சாகமும், உபயோகமும் குறையாமல் நடத்துபவர். மனிதரைப் பார்த்தாலே இளசுகள் கூட்டம் ஆர்ப்பரிக்கும். துள்ளலும், டைமிங் சென்சும் இவரது தனி ஸ்டைல்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர், எம்.சீ., கேம் ஜாக்கி, என்டர்டெய்னர், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான நிகழ்ச்சி, விளையாட்டு என, எந்த வகையான 'ஈவன்ட்'டாக இருந்தாலும், அதற்காகவே அவதாரம் எடுத்தது போல் 'ஜஸ்ட் லைக் தட்' கையாள்கிறார்.
தானும் உற்சாகமாக இருந்து மற்றவர்களையும் உற்சாகமாக வைக்கும் பிடித்தமான தொழிலைச் செய்வதாலோ என்னவோ, புதுமையாக யோசித்துக் கொண்டே இருக்கிறார்.
பி.எஸ்.சி., ஐ.டி., எம்.எஸ்சி., எம்.பில்., என படிப்பிலும் சாதித்தவர், 10 ஆண்டுகளாக, ஈவன்ட்ஸ் துறையில் கோலோச்சி வருகிறார்.
சீயான் விக்ரம், விஜய் ஆன்டனி, யுவன் உட்பட, கோலிவுட்டின் பெரும்பாலான செலிபிரட்டிகளுக்காக நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். தமிழ், மலையாளம் என இரு திரையுலகுகளின் முக்கிய நிகழ்வுகளை நடத்தியிருக்கிறார்.
ஐ.பி.எல்., பேன் பார்க், புட்பால் ஐ லீக் என, விளையாட்டுத் துறை நிகழ்வுகளையும் விட்டு வைக்கவில்லை.
லைவ் கான்செர்ட், புராடக்ட் லாஞ்ச், சர்வீஸ் லாஞ்ச், வர்த்தகக் கண்காட்சி, தொழில் கருத்தரங்குகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், மேடை நிகழ்வுகள், ஆபீஸ் கொண்டாட்டங்கள், தெருக் கொண்டாட்டங்கள், ரீ யூனியன், பேஷன் ஷோ, பொது நிகழ்வுகள், டேலன்ட் ஷோ, குடும்ப நிகழ்வுகள், கல்லூரி விழாக்கள், சமூக பொறுப்புணர்வு நிகழ்வுகள், அரசு விழாக்கள் என, ஒரு நிகழ்வையும் விட்டுவைக்கவில்லை; ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்வுகள். ஒவ்வொன்றையும் அதற்கே உரித்தான வழியில் நடத்திக் கொடுப்பது இவரது ஸ்டைல்
குழந்தைகள், இளசுகள், ஆண்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பையும் எளிதில் நிகழ்ச்சியில் ஒன்றச் செய்து விடுகிறார். விதவிதமான விளையாட்டுகளை ஸ்பாட்டிலேயே யோசித்து, அட போட வைக்கிறார்.
''நிகழ்ச்சி அல்ல; நினைவுகள் ப்ரோ! நல்ல நிகழ்வுகள் எப்போதும் நினைவில் இருக்கணும். அதான் நம்ம வேலையே” என்றார். அட ஆமால்ல!
தொடர்புக்கு: 9786498231